கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லக்ஷ்மி. பல மொழிகளிலும் புகழ்பெற்று விளங்கும் நடிகையான ராய் லட்சுமி, சமீப காலமாக பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் தனது சமூக வலைதள பக்கத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி ஃபோட்டோ ஷூட் நடத்திய ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

ராய் லட்சுமியில் கவர்ச்சி ஃபோட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், திடீரென்று தனது நிச்சயதார்த்த தேதியை வெளியிட்டிருந்தார். இது அவரது தீவிர ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. மாப்பிள்ளை யார் என குறிப்பிடாமல், ஏப்ரல் 27 ம் தேதி நிச்சயதார்த்தம் என்பதை விளையாட்டாக பதிவு செய்திருந்தார். 

இனிமேல் பாலிவுட் தான் எல்லாம் என எண்ணி பாலிவுட் பக்கம் தாவிய ராய்லட்சுமி, உடல் எடையை குறைத்து பஞ்சமே இல்லாமல் கவர்ச்சியில் தாராளம் காட்டத் தொடங்கிவிட்டார். தற்போது இவர், வியர்க்க விறுவிறுக்க வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் மிருகா படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஜான்சி ஐ.பி.எஸ் எனும் படம் தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷனில் உள்ளது. சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியாகவுள்ளது. ஒட்டகொம்பன் எனும் மலையாள படத்தில் நடிக்கவுள்ளார்.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)