டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் Fun Bucket பார்கவ். இவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.பார்கவ், நித்யா ஆகியோரின்‘ஓ மை காட், ஓ மை காட்’ வசன வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் டிக்டாக் பார்கவ் மீது ஒரு குடும்பத்தினர் பாலியல் புகார் அளித்துள்ளனர்.பார்கவ் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி அவருக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார்.

பயம் காரணமாக இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளார். அந்தச் சிறுமி 4 மாதம் கர்ப்பமடையவே இந்த விவகாரம் அவரது குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது.இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் குடும்பத்தினர் பார்கவ் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

பார்கவை போக்சோ சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பார்கவ் ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் கொண்டு வரப்பட்டு விசாரணைக்காக திஷா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.பார்கவிடம் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.