தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டீஸர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற பெருமையை படைத்தது.40 மில்லியன் பார்வையாளர்களுடன் 2.4 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மாஸ்டர் படத்தின் உரிமையை பிரபல OTT தளமான நெட்பிலிக்ஸ் கைப்பற்றியுள்ளது என்றும் பொங்கல் அன்று இந்த படம் நேரடியாக வெளியாகும் என்றும் தகவல்கள் பரவி வந்தன.இந்நிலையில் இது குறித்து மாஸ்டர் படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் குறிப்பிபடப்பட்டுள்ளதாவது தற்போது நிலவி வரும் கடினமான சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு வரும் வேலையில் , மாஸ்டர் படத்தை கொண்டாடவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதையும் நாங்கள் அறிந்தோம்,நாங்களும் அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்.

கடந்த சில நாட்களாக பல செய்திகள் படத்தின் ரிலீஸ் குறித்து பரவி வருகின்றன.இது குறித்து விளக்கம் அளிக்கவே தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.மாஸ்டர் படத்தினை நேரடியாக வெளியிட OTT தளத்தில் இருந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது,இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதே நமது தமிழ் திரையுலகுக்கு நல்லது என்று முடிவெடுத்துள்ளோம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.