இந்தி நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப தனிப்பட்ட முறையில் பெருமளவில் உதவி செய்து வருவது அனைவரும் அறிந்ததே. 

சொந்த ஊர்களுக்கு புலம் பெயர் தொழிலாளர்களை அனுபுவது தொடங்கி,  அவர்களுக்கு தேவையான  உணவு, தங்கும் இடம், குடிநீர் என அத்தனை அத்தியாவசிய தேவைகளையும் செய்து கொடுத்து வருகிறார் சோனு சூட். 

 கரோனா வைரஸ் பரிசோதனைக்கான கருவிகளையும் வழங்கியிருப்பதுடன் மும்பையில் தனக்கு சொந்தமான இடத்தை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதித்துள்ளார்.

'கர் பேஜோ’ இயக்கத்தின் மூலம் இதுவரை ஏறத்தாழ 12,000 புலம்பெயர் தொழிலாளர்களை மும்பையிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் சோனு சூட். அதோடு 45,000 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.   ஒருநாளில், சுமார் 22 மணி நேரம், நிவாரணப் பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்பை மேற்கொண்டுவருகிறார். 


"நம்முடைய சாலைகள், வீடுகள், அலுவலகங்களைக் கட்டுவதற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் உதவியிருக்கிறார்கள். அவர்கள் வீடில்லாமல் அவதிப்படுவதை நாம் பார்த்துகொண்டிருக்க முடியாது” என்று சொல்கிறார் நடிகர் சோனு சூட். 

கேரளாவில் சிக்கித்தவித்த ஒரிசாவைச் சேர்ந்த 150 புலம் பெயர் பெண் தொழிலாளர்களை சொந்த செலவில் விமானம் ஏற்பாடு செய்து அவர்களை ஒரிசாவுக்கு அனுப்பு வைத்திருக்கிறார். இத்தனை தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் விமானத்தில் பறந்தது இதுவே முதல்முறையென சோனுவுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால் இது எதையுன் தன் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல், அடுத்த கட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் சோனு சூட். 

கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஒரிசா, பீகார், உத்திரப்பிரதேசம் என இந்தியா முழுதும் புலம் பெயர் தொழிலாளர்களை அனுப்பி வைக்கிறார். பாஸ் கிடைப்பதில் சிக்கல் இருக்கும் மாநிலங்களில் அவரே பேசி, அதற்கான தீர்வை பெறுகிறார்.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, சோனு சூட்டை தொலைபேசியில் அழைத்து அவரது செயலுக்காக பாராட்டி உள்ளார். 

 மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியும் சோனுவை பாராட்டி உள்ளார். அதேபோல் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் சோனு சூட் எனும் ரியல் ஹீரோவை பாராட்டி வருகிறார்கள்.

எங்களால் இயன்ற வரையில், உதவ முயன்று வருகிறோம். இங்கிருக்கும் கடைசி புலம்பெயர் தொழிலாளர் வீட்டுக்குச் செல்லும் வரையில், இதை நிறுத்த முடியாது என்றே நினைக்கிறோம். 

"சொந்த கிராமங்களுக்குச் செல்ல மக்கள் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் நடந்து செல்வதைப் பார்த்த பிறகு, இரவு என்னால் உறங்க முடியவில்லை". நானும் பிழைப்புக்காக மும்பைக்கு வந்த புலம்பெயர் தொழிலாளி என்று இரவு பகல் பாராமல் இக்கட்டான சூழ்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டிருக்கும்  சோனு சூட்  ரியல் சூப்பர் ஹீரோ.. வாழ்த்துகள் ஹீரோ.