வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஷாந்தனு. சமீபத்தில் புதிதாக youtube சேனல் துவங்கிய ஷாந்தனு, மனைவி கிகியுடன் சேர்ந்து என்டர்டெயின் செய்து வருகிறார். 

Thalapathy Vijay Praises Shanthanus Short Film

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்கள் உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல், சமையல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஷாந்தனு தன்னை இயக்குனராக செதுக்கிக் கொண்டார். இந்த லாக்டவுனில் கொஞ்சம் Corona Naraiyya காதல் எனும் குறும்படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த குறும்படம். 

Thalapathy Vijay Praises Shanthanus Short Film

தற்போது இந்த படத்தை பார்த்து விட்டு தளபதி விஜய் பாராட்டியது பற்றி பேசியுள்ளார் ஷாந்தனு. சினிமா விமர்சகர் மற்றும் ட்ராக்கரான கௌஷிக் LM உடன் லைவ்வில் தோன்றிய ஷாந்தனு, மாஸ்டர் படத்தின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அத்துடன் ஷாந்தனு இயக்கிய குறும்படத்தை பார்த்துவிட்டு, நைஸ் நன்றாக உள்ளது. முழுப்படத்தையும் பார்த்து ரசித்தேன் என்று பாராட்டினாராம் தளபதி விஜய்.