தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் அவர்களின் தாயார் ஜகதம்மாள் வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார். 89 வயதாகும் அவரது மறைவிற்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். 

Producer Dhananjayans Mother Passed Away

இருமுறை தேசிய விருதினை பெற்ற தனஞ்ஜெயன் தனது தாயாரின் மறைவு குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், எனக்கு எல்லாமுமாக இன்று வரை இருந்த என் அன்பு அன்னை ஜகதம்மாள், இன்று காலை அமைதியாக என்னை விட்டு பிரிந்தார். அவரின் ஆசிகள் என்றுமே என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தனது பதிவை செய்தார். 

Producer Dhananjayans Mother Passed Away

தனஞ்ஜெயன் தயாரிப்பில் தற்போது கபடதாரி படம் உருவாகி வருகிறது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இந்த படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சைமன் K கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.