தமிழ் திரையுலகில் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர் சியான் விக்ரம். தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரிய பட்ஜெட் என்பதால் எப்போது படப்பிடிப்பு முடியும் என்பது தெரியாத நிலையில் உள்ளது. கோப்ரா படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது. 

Chiyaan Vikram To Team Up With KarthikSubbaraj

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சியான் விக்ரம் கைகோர்க்கவுள்ளதாக தகவல் தெரியவந்தது. கார்த்திக் சுப்புராஜ் கூறிய கதை விக்ரமுக்கு மிகவும் பிடித்துவிட்டதால், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது. கோப்ரா படத்தை தயாரித்து வரும் லலித் குமார், கார்த்திக் சுப்புராஜ் - விக்ரம் படத்தையும் தயாரிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Chiyaan Vikram To Team Up With KarthikSubbaraj

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்ட கார்த்திக் சுப்புராஜ். லாக்டவுன் முடிந்தவுடன் சியான் விக்ரமுக்கு கூறிய கதையின் ஸ்கிரிப்ட் பணிகளில் இறங்குவார் என்று கூறப்படுகிறது. நிச்சயம் இந்த காம்போ இணைந்தால் அரங்கமே அதிரும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.