தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் மற்றும் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது இதனை ஒட்டி ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.இந்த பாடலில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் போட்ட ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த பாடல் சமீபத்தில்  1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்திருந்தது.தற்போது இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.