தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனவால் பாதிக்கப்பட்டுளள்து.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார்.இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் திரைப்படம் கொரோனா பாதிப்பு சரியான பின் வெளியாகும் என்று தெரிகிறது.இதனை தவிர சில பாடல்களுக்கு படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.

கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பலரும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.சிவகார்த்திகேயன் ட்விட்டரிலும்,இன்ஸ்டாகிராமிலும் அவ்வப்போது ஆக்டிவ் ஆக இருப்பவர்.சினிமாவை தாண்டி தனக்காக ரசிகர்கள் எடுக்கும் சின்ன சின்ன முயற்சிகளான வித்தியாசமான வீடியோக்கள்,புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்வார்.அதோடு தன்னை சுற்றி நடக்கும் சமூகப்பிரச்னைகளுக்கும் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிடுவார்.

தற்போது ட்விட்டரில் அதிகம் ரசிகர்களை பெற்று ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.ட்விட்டரில் அதிகம் தொடரப்பட்ட தமிழ் நடிகர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில உள்ளார் சிவகார்த்திகேயன்.6 மில்லியன் ரசிகர்களை பெற்று நேற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சிவகார்த்திகேயன் அவரது மகள் ஆராதனா சிவகார்த்திகேயனுடன் இருக்கும் ஒரு வெளிவராத புகைப்படத்தை ரசிகர் ஒருவர் வெளியிட்டார் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லுங்கில் காணலாம்