இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.

சோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,மெகாஸ்டார் சிரஞ்சீவி,மாதவன்,கெளதம் கார்த்திக்,STR,அரவிந்த் சுவாமி,ஜெயராம் என்று பல பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார் விஜய் சேதுபதி.இதனை தொடர்ந்து அடுத்ததாக விஜயின் மாஸ்டர்,அமீர்கானுடன் ஒரு ஹிந்தி படம்,முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தரமான படங்களை வெளியிட்டு வருகிறார் விஜய் சேதுபதி.கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பலரும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வந்தனர்.பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.விஜய்சேதுபதியும் சில லைவ்களில் வந்து ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

சமூகவலைத்தளங்களில் இருப்பததை முதலில் தவிர்த்து வந்த விஜய்சேதுபதி,பின்னர் ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் இணைந்தார்.சினிமாவை தாண்டி சமூகப்பிரச்னைகள் பலவற்றையும் ரசிகர்களிடம் பகிர்ந்து வந்தார் விஜய் சேதுபதி.தற்போது இவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளார்.இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விஜய் சேதுபதி ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்