சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் பழைய எபிசொட்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த தொடரில் நடித்துள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.இவர்களது புகைப்படங்கள்,விடீயோக்களை,ஸ்டோரிக்கள் என்று எது வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடும்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் டப்பிங் வேலைகள் சில நாட்களுக்கு முன் தொடங்கியுள்ளது.இந்த தொடரின் டப்பிங்கை நேற்று இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சரவணவிக்ரம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.இதனை தொடர்ந்து நேற்று இந்த தொடரின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளது என்ற தகவலையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த தொடரில் நடித்து வரும் ஹேமாவும் இந்த தொடரின் ஷூட்டிங் குறித்து தனது இன்ஸ்டாகிராமில்பதிவிட்டுள்ளார்.தொடர்ந்து இந்த தொடரில் முல்லையாக அசத்தி வரும் சித்துவும் தற்போது ஷூட்டிங்கை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.தங்கள் மனம் கவர்ந்த சீரியலின் ஷட்டிங் ஆரம்பித்ததை அடுத்து ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

இன்று இந்த தொடரில் மீனவாக நடித்து வரும் ஹேமாவிற்கும்,தனமாக நடித்து வரும் சுஜிதாவிற்கும் பிறந்தநாள்.இவர்கள் இருவருக்கும் பிரபலன்களிடமும்,ரசிகர்களிடமும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் ஹேமாவின் பிறந்தநாள் சர்ப்ரைஸாக பாடல் பாடி வீடியோ கால் மூலம் குடும்பத்தினர் சர்ப்ரைஸ் செய்துள்ளனர்.இவர்கள் அன்பை பார்த்த ஹேமா , ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.இந்த வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஹேமா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thank you soo much for this lovely surprise gift.....@surpriseplanners_official 🥰 Spl thanks to My family

A post shared by Hema Rajkumar (@hemarajsathish) on