தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை பட்டியலில் சயீஷாவிற்கென தனி இடமுண்டு. இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வனமகன் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்து அசத்தினார். கடந்த ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்தார். 

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான டெடி திரைப்படத்தில் நடித்திருந்தார் சாயீஷா. ஆர்யா ஹீரோவாக நடித்த இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருந்தார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்தார்.திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சயீஷா இருவரும் ஒன்று சேர்ந்து நடித்திருந்தனர். 

நடிகை சாயீஷா கன்னடத்திரையுலகில் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக யுவராத்னா திரைப்படத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் ஆனந்தன் இயக்கிய இப்படத்தில் சூப்பராக நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா காரணமாக வெளியாக வில்லை. இந்த மாத துவக்கத்தில் ஏப்ரல்1-ம் தேதி இப்படம் வெளியானது.

சமீபத்தில் யுவரத்னா படத்தில் இடம்பெற்ற நீதானே நா என்ற பாடலுக்கு டான்ஸ் மாஸ்டருடன் நடனம் ஆடிய வீடியோவின் காட்சிகளை சாயிஷா வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. 

அதைத்தொடர்ந்து தற்போது தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை சாயிஷா வெளியிட்டு இருக்கிறார். வீடியோவில் இரண்டு கைகளையும் தூக்கி அப்படியே எகிறி குதிக்கிறார் சாயிஷா. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)