ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே.இந்த படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்த அவர் ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டார்.இதனை தொடர்ந்து வருண் ஹீரோவாக நடித்த பப்பி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார்.

டான்சில் ஆர்வம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டான்ஸ்,ஒர்க்கவுட் வீடியோக்களை பதிவிடுவார்.கொரோனா காரணமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க நிறைய ஒர்க்கவுட் மற்றும் டான்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார் சம்யுக்தா ஹெக்டே.இந்த லாக்டவுன் நேரத்தில் இவர் நிறைய ஹூப் எனப்படும் வளையத்தை வைத்து செய்யும் ஒர்க்கவுட்களை அதிகம் செய்து வந்தார்.

டிக்டாக் சில நாட்களுக்கு முன் தடைசெய்யப்பட்டது இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.அச்சு அசலாக டிக்டாக்கின் அனைத்து வசதிகளும் உடையதாக இருக்கும் இது பலரையும் ஈர்த்து வருகிறது.இதில் தனது பெல்லி டான்ஸ் வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன் பதிவிட்டார் சம்யுக்தா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ஓயாத நிலையில் ,மீண்டும் தனது ஹூப் நடன வீடியோக்களை பதிவிட்டார் சம்யுக்தா.நேற்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஹூப் வீடியோ ஒன்றை பதிவிட்டார் சம்யுக்தா.இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது.

ஆனால் ரசிகர் ஒருவர் பட வாய்ப்புகள் இல்லாததால் இப்படி சர்க்கஸ் செய்து ப்ராக்டிஸ் செய்கிறீர்களா என்று அவரை கேலி செய்து கமெண்ட் பதிவு செய்திருந்தார்.இதற்கு பதிலளித்த சம்யுக்தா சோசியல் டிஸ்டன்சிங் ஓடு புதிய கலையை கற்க முயற்சித்து வருகிறேன்.உங்கள் கருத்துக்கு நன்றி இருந்தாலும் சர்க்கஸில் வேலைபார்ப்பது கேவலம் இல்லை அவர்கள் குடும்பங்களை விட்டு விட்டு மக்களை சந்தோச படுத்த தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர்.அது உங்களை போன்ற நபர்களுக்கு எப்படி புரியும் என்று சாதுர்மாயாக பதிலளித்துள்ளார்.இந்த பதிவு வைரலாகி வருகிறது.மேலும் சம்யுக்தவின் இந்த சாமர்த்தியமான பதிலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

samyuktha hegde reply to a fan is going viral samyuktha hegde reply to a fan is going viral