கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அணைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.சன் டிவியின் பிரபல தொடரான அழகு நிறுத்தப்படுகிறது என்று அதன் ஹீரோயின் ஸ்ருதி ராஜ் ஒரு வீடியோ மூலம் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.அதில் தனக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று தெரிவித்த ஸ்ருதி தனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்களுக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார்.இந்த தொடர் நிறுத்தப்பட்டதை அடுத்து இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த சோகத்துடன் இருந்தனர்.

இந்நிலையில் இந்த தொடருடன் சேர்த்து மொத்தம் 4 தொடர்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பை நிறுத்தவுள்ளது என்ற தகவல் கிடைத்திருந்தது.இது குறித்து பிரபல நாளிதழான ஹிந்துவிற்கு தயாரிப்பு நிறுவனம் விஷன் டைம்ஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அதில்,அவர்கள் தயாரித்து வரும் அழகு,தமிழ் செல்வி,கல்யாண பரிசு,சாக்லேட் உள்ளிட்ட 4 தொடர்களும் ஒளிப்பரப்பு நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.இந்த தொடர்களில் நடிக்கும் பல நடிகர்களும் வேறு மாநிலங்களில் இருந்து வர வைக்கப்பட வேண்டும் என்றும் அது தற்போதைய சூழலில் கடினம் என்றும்,அவர்கள் வந்தாலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் கேரவன் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சன் டிவி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வேறு நடிகர்களை வைத்து ட்ரை செய்தும் செட் ஆகவில்லை ஆதலால் இந்த நான்கு தொடர்களின் ஒளிபரப்பும் நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.மேலும் சில புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த 4 சீரியல்களின் திடீர் நிறுத்தம் அந்த சீரியல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.