சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.இவரது 25ஆவது படமான வி படத்தை Mohan Krishna Indraganti இயக்கியிருந்தார்.வி படம் அமேசான் ப்ரைமில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி,ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

நானி முதல்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் ,இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.இதனை அடுத்து டக் ஜெகதீஷ் படத்தின் ஷூட்டிங்கை முடித்து ரிலீசுக்கு தயாராக உள்ளது,கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனை தொடர்ந்து Shyam Singha Roy,Ante Sundaraniki போன்ற படங்களில் அடுத்ததாக நடித்து வருகிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் Ante Sundaraniki படத்தை Mental Madhilo,Brochevarevarura உள்ளிட்ட படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்குகிறார்.இந்த படத்தின் நஸ்ரியா ஹீரோயினாக நடிக்கிறார்.இது இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.விவேக் சாகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

2021 இறுதியில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது தனது முதல் தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளதாக நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.நஸ்ரியா நானி இருவரையும் ஒன்றாக திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.