YouTUBE-ல்  திரைப்பட விமர்சனங்கள் செய்யும் YouTUBE சேனல்களில் மிகப்பிரபலமான ஒரு தமிழ் YouTUBE சேனல், Blue சட்டை மாறனின் தமிழ் டாக்கீஸ் YouTUBE சேனல். நீல சட்டை அணிந்து தனக்கே உரித்தான ஒரு உடல்மொழியில் திரைப்படங்களை விமர்சனம் செய்வது இவரது தனித்துவம். 

சர்ச்சைக்குள்ளான பல விமர்சனங்களை செய்து YouTUBE-ல் மிகவும் பிரபலமடைந்த ப்ளூ சட்டை மாறன் ,திரைப்பட விமர்சனங்களை பார்ப்பதற்கு என்று பல லட்சம் பேர் இவரை யூட்யூபில் பின்தொடர்கிறார்கள். 

பல திரைப்படங்களை விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன்  இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ப்ளூ சட்டை மாறன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ஆன்டி இந்தியன் திரைப்படம் தயாராகி வந்தது. சில தினங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் மாறன் வெளியிட்டார். ப்ளூ சட்டை மாறன்-ன் ஆன்டி இந்தியன் திரைப்படத்தில் பணியாற்றிய முக்கிய தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். ஆன்டி இந்தியன் திரைப்படத்தில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றிய நபர் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் படக்குழுவினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் மொத்த வேலைகளும் முடிவடைந்த நிலையில் திரைப்படத்தை சென்சார் செய்வதற்காக சமர்ப்பித்தார் மாறன். ஆன்ட்டி இந்தியன் திரைப் படத்தைப் பார்த்த சென்சார் குழு இத்திரைப்படத்திற்கு  தடை விதித்தது. இதில் நிலவும் பல அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளை குறித்து இத்திரைப்படத்தின்  கதைக்களம் சமுதாயத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இத்திரைப்படத்திற்கு சென்சார் குழு தடை விதித்தது.