தமிழ் சினிமா நடிகர்களில் பெரிதும் பிரபலமானவர் மிர்ச்சி சிவா. 12B படத்தில் துணை நடிகராக அறிமுகமான சிவா தற்போது அகில உலக சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். துவக்கத்தில் FM சேனல் ஒன்றில் ஆர் ஜேவாக பணியாற்றி வந்தவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து தமிழ் படம், கலகலப்பு, தில்லு முல்லு, யா யா, வணக்கம் சென்னை என பட்டையை கிளப்பினார். 

தற்போது யோகி பாபு இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார். யோகிபாபு நடித்திருந்த தர்மபிரபு படத்தை இயக்கியவர் முத்துக்குமரன். தற்போது இவர் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம் சலூன். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் எல்லா மயிரும் ஒன்னுதான் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. ஓனர் சிவா, ஓர்க்கர் யோகிபாபு என்றும் உள்ளது. 

சலூன் படத்தை ரேதன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். பாலச்சந்தர் கலை இயக்கம் செய்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். யுகபாரதி பாடல் வரிகள் எழுதுகிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

மிர்ச்சி சிவா கைவசம் சுமோ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதுதவிர்த்து ராம்பாலா இயக்கத்தில் இடியட் என்ற படத்தில் நடித்து வருகிறார். யோகிபாபு நடித்துள்ள ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இவர் நடிக்கவுள்ள சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, அடங்காதே திரைப்படங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நின்று கொள்வான், பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி, கன்னி ராசி ஆகிய திரைப்படங்களின் வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.

சமீபத்தில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள பேய் மாமா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து யோகிபாபு கைவசம் ட்ரிப் திரைப்படம் உள்ளது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா மற்றும் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதுதவிர்த்து தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு.