விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக விஜய் டிவில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் கேப்ரில்லா. அதன் மூலமே தனது அறிமுகத்தை இவர் சின்னத்திரையில் கொடுத்தார். கேபி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 

இதையடுத்து இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு வாய் பேச முடியாத தங்கையாக சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதையடுத்து சமுத்திரக்கனியின் திரைப்படமான அப்பா திரைப்படத்தில் ரஷிதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார். இந்த வீட்டில் இவர் ஆடும் நடனத்தை பார்க்கவே அவருக்கு தனி ரசிகர்கள் உண்டு. அவ்வப்போது சில சில சண்டைகள் வந்தாலும் இவர் அனைவரிடத்திலும் அன்பாகவே இருந்தார். 

ஆரிக்கும் பாலாஜிக்கும் இடையே கடும் போட்டி நிலவியதால் இதில் தான் வெற்றி பெற முடியாது என்று உணர்ந்த கேபி. கிடைத்த 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அந்த சமயத்தில் இந்த விஷயம் பெரும் பாராட்டுக்குரியதாகவே பார்க்கப்பட்டது.

எப்போது இணையத்தில் தன்னை பிசியாக வைத்திருக்கும் கேபி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிகின்றன. இந்நிலையில் கேப்ரில்லா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்துள்ளார் பிக்பாஸ் பிரபலமான ரியோ. கேபியின் நெருங்கிய நண்பரான ரியோ, இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கு கேபி என்று கமெண்ட் செய்ய... அதை பார்த்த ரசிகர்கள் ஃபேஷன் என்று கேபிக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

bigg boss rio raj funny comment on gabriella latest photos

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gaby (@gabriellacharlton_)