சிலம்பரசன் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இதையடுத்து பத்து தல படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. பத்து தல என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டில் போஸ்டரை தமிழ் சினிமாவைச் சேர்ந்த 10 முன்னணி இயக்குனர்கள் வெளியிட்டு அசத்தினர். 

கன்னடத்தில் நார்தன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் முஃப்தி. 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஞானவேல்ராஜா தயாரித்து வந்த இந்தப் படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். முஃப்தி படம் இயக்குனரே தமிழ் ரீமேக்கையும் இயக்கி வந்தார். படப்பிடிப்பு தாமதம் உள்ளிட்ட சில விஷயங்களால் இயக்குனர் நார்தன் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே..

அதன் பின் சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கவுள்ளார் என்ற ருசிகர தகவல் வெளியானது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன் ஆகியோர் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. 

இந்நிலையில் தற்போது பத்து தல படத்தில் நடிகர் கலையரசன் புதிதாக இணைந்துள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்து தல படத்தில் அமீர் என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளார். நடிகர் கலையரசனுக்கு கடந்த ஆண்டு ஸ்பெஷல் என்றே கூறலாம். லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கிய ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்தார். 

கலையரசன் கைவசம் சார்பட்டா பரம்பரை படம் உள்ளது. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இதற்காக தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார் ஆர்யா. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.