விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்த சஞ்சீவ் பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபாலமானவராக மாறினார்,இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்தவர் ஆலியா மானஸா.

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு ஐலா சையத் என்று இருவரும் பெயரிட்டுள்ளனர்.குழந்தையின் கியூட் வீடீயோவை அவ்வப்போது இருவரும் பகிர்ந்து மகிழ்ந்து வந்தனர்.

சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்து வருகிறார்.பிரியங்கா எம் ஜெயின் இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.மனோகரா கிருஷ்ணன் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.கொரோனா பாதிப்பை தொடர்ந்து இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடரின் நாயகி ப்ரியங்கா எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருப்பார்,சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார் ப்ரியங்கா.ரசிகர்கள் உஷாராக இருக்கவும் அவர் தெரிவித்திருந்தார்.

 

kaatrin mozhi serial actress priyanka jain instagram account hacked