தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள் நல்ல நல்ல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். முன்னதாக இந்த ஆண்டில்(2022) ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவமேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த விந்து தணிந்தது காடு திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 

மேலும் விரைவில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் தயாராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து இவரது தயாரிப்பில் சுமோ & ஜோஸ்வா - இமை போல் காக்க ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 23வது திரைப்படமாக தயாராகும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த வீரன் திரைப்படம் சமீபத்தில் நிறைவடைந்து அதன் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ஏழாவது திரைப்படமாக ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரிக்கும் இந்த புதிய #HHT7 திரைப்படம் தயாராகவுள்ளது. 

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்கும் #HHT7 படத்தில் பள்ளியின் விளையாட்டு ஆசிரியராக ஹிப்ஹாப் ஆதி நடிக்க இருக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒழிப்பதிவில், GK.பிரசன்னா படத்தொகுப்பு செய்யும் #HHT7 திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். 

மேலும் படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் இந்த #HHT7 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக  படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் படத்தின் அறிவிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
 

We at @VelsFilmIntl are glad to associate with @hiphoptamizha for his Next #HHT7.

A #HipHopTamizha Musical
Directed by @karthikvenu10
Produced by @IshariKGanesh @editor_prasanna @madheshmanickam @thinkmusicindia @Ashkum19 @proyuvraaj pic.twitter.com/roxb6wG2JK

— Vels Film International (@VelsFilmIntl) November 14, 2022