இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தன்னை செதுக்கி கொண்டவர் ஜிவி பிரகாஷ் குமார். வரிசையாக படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று, விஜய் இயக்கத்தில் தலைவி மற்றும் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஜிவி பிரகாஷின் வெற்றி பயணத்தில் அவரது ரசிகர்களுக்கு எவ்வளவு பங்குள்ளதோ அதே அளவிற்கு அவரது துணைவி சைந்தவிக்கும் பங்குள்ளது. 

பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஜிவி பிரகாஷ் இசையில் பல பாடல்களையும் சைந்தவி பாடியிருக்கிறார். கடைசியாக அசுரன் படத்தில் சைந்தவி பாடிய எள்ளு வய பூக்கலையே அதிக பாராட்டுகளை பெற்றது. 

சமீபத்தில் இந்த அழகான தம்பதியினருக்கு சமீபத்தில் குட்டி ஏஞ்சல் பிறந்தது. குழந்தையின் மீது அன்புள்ள அப்பாவாக ஜிவி பிரகாஷ் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது, இன்னும் என் காதல் அதிகரிக்கிறது. நீங்களும், இந்த சிறிய இளவரசியும் என் வாழ்வில் நடந்த மிகச்சிறந்த விஷயங்கள் என சமீபத்தில் அழகான பதிவை செய்தார் சைந்தவி.

இதைத்தொடர்ந்து சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்த்தில் தனது மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், குழந்தையின் பெயர் அன்வி என்பதை தெரிவித்தார் ஜிவி பிரகாஷ். குழந்தையின் பெயரை ரசிகர்களுக்கு கூறி பதிவு ஒன்றை செய்துள்ளார். ஜிவி பிரகாஷுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள். 

ஜிவி பிரகாஷ் தற்போது இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் நடித்துள்ளார். அபர்நிதி, ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து ஹாலிவுட்டில் உருவான ட்ராப் சிட்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். 

இதன் மூலம் முதல் முதலாக ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். படத்தில் மருத்துவராக வரும் ஜிவி பிரகாஷின் நடிப்பை காண ஆவலில் உள்ளனர் அவரது ரசிகர்கள். தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியானது. ட்ராப் சிட்டி என்பது இன்றைய ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை ஒரு கலைநயமிக்க வகையில் எடுத்துக்காடும் திரைப்படமாகும், மேலும் போதைப் பொருளை வியாபாரம் செய்யும் கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு எதிராக, சாதாரன மனிதனாகப் போராடும் ராப்பரின் கதையைச் சொல்கிறது. ரிக்கி பர்ச்சலின் இயக்கும் இப்படத்தை தமிழரான டெல் கே. கனேசன் தயாரிக்கிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Here is my princess #Anvi ... @saindhavi_prakash @bhavanisre ... photo by @mommyshotsbyamrita

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash) on