பாப் இசை பாடல்கள் பாடுவதில் வல்லவரான கருணாஸ், பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் மூலம் புகழ் பெற்ற அவர் பிதாமகன், வசூல் ராஜா, பாபா, பொல்லாதவன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதன் பின் விநியோகஸ்தராக பல படங்களை வாங்கி சில மாவட்டங்களில் வெளியிட்டு இருக்கிறார் கருணாஸ். அதன் பிறகு திண்டுக்கல் சாரதி என்ற படத்தை எடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 

அரசியலில் களமிறங்கிய கருணாஸ்  தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கருணாஸ். 

வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். தனுஷ் நடித்த இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் கென். சிவசாமியின் மகன் சிதம்பரமாக தனது ரோலில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கென். மஞ்சுவாரியர், டீஜே, பசுபதி ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 

இந்நிலையில் நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட காத்திருக்கும் கென், நண்பர்களுடன் பாடல் பாடி மேலம் தட்டும் வீடியோ, இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பிரியாணி வீடியோக்களுக்கு அய்யப்பனும் கோஷியும் தீம் பாடலை போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். தற்போது இதே பாணியில் கென், ஆஹா.. ஓஹோ.. என்று பாடல் பாடி வீடியோவை பகிர்ந்துள்ளார். 

வெளி நிகழ்ச்சிகளிலும், நேர்காணலிலும் இயல்பாக இருக்கும் கென்னுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிய அதிகம் வாய்ப்புள்ளது. அசுரன் படத்தை தொடர்ந்து இனி அவர் தேர்தெடுத்து நடிக்கும் படங்களிலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

That Biriyani waiting moment🥳🤩

A post shared by Ken Karunaas (@ken_karunaas) on