இந்தியா சீனா எல்லை பிராந்தியமான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15,16 ஆகிய தேதிகளில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பு பாதிப்புகள் தொடர்பாக அந்நாடு தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை பெரிதும் பாதித்தது.

இந்திய வீரர்கள் உயிரிழப்பை தொடர்ந்து இந்திய வணிகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் சீனாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்துள்ள மத்திய அரசு சீனாவுடனான வணிக தொடர்புகளையும் குறைத்து வருகிறது. இதனால் தற்போது இந்தியாவுடனான மோதல் போக்கை கைவிட்டு சமரசம் செய்யும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான சீனத்தூதர் சன் வீடோங், லடாக் எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் இந்தியாவும் சீனாவும் பார்க்க விரும்பாத துருதிஷ்டவசமான சம்பவம். இப்போது நாங்கள் அதை சரியாகக் கையாள வேலை செய்கிறோம் என தெரிவித்தார்.

70 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நல்ல உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இருதரப்பு உறவுகளும் சோதனைகளைத் தாங்கி, மேலும் நெகிழவைத்துள்ளன. இந்த புதிய நூற்றாண்டில், இருதரப்பு உறவுகள் பின்தங்கிய நிலைக்கு பதிலாக தொடர்ந்து முன்னேற வேண்டும்," என்று அவர் கூறினார்.

இரண்டு பண்டைய நாகரிகங்களான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இருதரப்பு உறவுகளை முறையாகக் கையாளும் ஞானமும் திறனும் உள்ளது. சீனா இந்தியாவை ஒரு போட்டியாளருக்கு பதிலாக ஒரு கூட்டாளியாகவும், அச்சுறுத்தலுக்கு பதிலாக ஒரு வாய்ப்பாகவும் பார்க்கிறது. இருதரப்பு உறவுகளில் எல்லை பிரச்சனைகளை தீர்க்கவும், பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையின் மூலம் வேறுபாடுகளை சரியாக கையாளவும், இருதரப்பு உறவுகளை மீண்டும் நல்ல பாதையில் செலுத்தவும் நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவும் சீனாவும் "நிம்மதியாக வாழ வேண்டும், மோதல்களைத் தவிர்க்க வேண்டும்" என்று சன் வீடோங் கூறினார். 

எந்த நாடும் உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, சொந்தமாக வளர்ச்சியைத் தேட முடியாது. நாம் தன்னம்பிக்கையை கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், உலகமயமாக்கலின் போக்குக்கு ஏற்ப வெளி உலகத்துடன் ஒன்றி இருக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே சிறந்த வளர்ச்சியை நாம் அடைய முடியும், "என்று அவர் கூறினார்.


லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி. பகுதியில் இருந்து சீனா ராணுவம் முற்றிலும் நகர்ந்து செல்ல வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், லடாக் பகுதியில் மட்டும் பின் வாங்கிய சீன ராணுவம் மற்ற இடங்களில் இருந்து நகர தயக்கம் காட்டுகிறது. இதனால் பொருளாதாரம் மற்றும் ராணுவ அளவில் சீனாவுக்கு இந்தியா நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்திய பாதுகாப்புப்படை தளபதி பிபின் ராவத் சில தினங்களுக்கு முன், பேச்சுவார்த்தை தோல்வி என்றால், ராணுவ நடவடிக்கைக்கு தயாராக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவை நாங்கள் பார்ட்னராகவே பார்க்கிறோம் என்று சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் இதுகுறித்து கூறுகையில் ‘‘சீனா இந்தியாவை எதிரியாகவும், மிரட்டலுக்கான வாய்ப்புள்ளது என்பதற்கு பதிலாக பார்ட்னராகவே பார்க்கிறது. எல்லை பிரச்சினையை இருதரப்பு நட்பில் பொறுத்தமான இடத்தில் வைக்க நம்புகிறோம்.

பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையின் மூலம் வேறுபாடுகளை சரியாகக் கையாளுங்கள் மூலம் மீண்டும் இருதரப்பு உறவு முன்னதாகவே பழைய நிலைக்கு தள்ளும்’’ என்றார்.