விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று பொம்முக்குட்டி அம்மாவுக்கு.ரேத்வா என்ற குழந்தை நட்சத்திரம் பொம்முவாக நடித்து வருகிறார்.கிரண்,ராஷ்மிதா ரோஜா,ஸ்ரீதேவி அசோக்,ஸ்ருதி ஷண்முகப்ரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது.மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த தொடரின் ஷூட்டிங் தொடங்கி , புதிய எபிசோடுகள் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் ஸ்ரீதேவி அசோக் நடித்து வருகிறார்.வாணி ராணி,கல்யாண பரிசு உள்ளிட்ட சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்திருந்த இவர்.ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.இந்த தொடரில் வில்லியாக நடித்த இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களை பெற்றார்.

2019 ஏப்ரல் மாதம் பிரபல போட்டோக்ராபர் அசோக் என்பவரை ஸ்ரீதேவி மனம் முடித்தார்.தற்போது
 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் சன் டிவியின் பூவே உனக்காக தொடர்களில் நடித்து வருகிறார் ஸ்ரீதேவி.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொம்முக்குட்டி அம்மாவுக்கு தொடரில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஷூட்டிங்கில் வரும் தற்கொலை முயற்சி காட்சிக்காக ஸ்ரீதேவி தூக்குபோடுவது போன்ற காட்சி படமாக்கப்பட இருந்தது.இதற்கு அவருக்கு அவர் கணவர் உதவும் வீடீயோவை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடீயோவை பார்த்த பலரும் இவர்களை போல ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@ashok_chintala helping out for Bommakutti Ammavuku suicide scene...

A post shared by Sridevi Ashok (@sridevi_ashok) on