கேரளாவில் 14 வயது சிறுமியை பக்கத்து வீட்டு அண்ணன்கள் சேர்ந்த கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரத்தின் உச்சமாக, அதே ஊரில் பலருக்கும் இரையாக்கிய சம்பவம், கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 
 
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, தனது தாயாருடன் தணியாக வசித்து வந்தார். அப்போது, கடந்த சில வருடங்களுக்கு முன் சிறுமியின் தாயார் உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிறுமியை தங்கள் வீட்டில் தங்க வைத்து வளர்த்து வந்தனர். 

இந்நிலையில், அந்த 14 வயது சிறுமி அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இப்படிப்பட்ட சூழல் நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வெளிமாநில இளைஞர்கள் 3 பேர் தங்கி இருந்து வந்துள்ளனர்.

அப்போது, அந்த வட மாநில இளைஞர்களுடன், சிறுமி “அண்ணன் அண்ணன்” என்று, அன்பாக பழகி வந்துள்ளார். இது போன்ற சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் அந்த குடியிருப்பு பகுதியில் யாரும் இல்லாத நிலையில், பக்கத்து வீட்டில் இருந்த 3 இளைஞர்களும் சேர்ந்து, சிறுமியை மிரட்டி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

மேலும், கொடூரத்தின் உச்சமாக, அந்த சிறுமியை மிரட்டியும் தாக்கியும் அந்த ஊரின் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்றும் பலருக்கும் சிறுமியை இரையாக்கி உள்ளனர். இதனால், அந்த சிறுமி பலரால், பலமுறை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடும் இன்னல்களுக்கு ஆளானார்.

இந்நிலையில், சிறுமியின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமி ரொம்பவும் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். அந்த சோர்வுடனேயே மாணவி பள்ளிக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அங்கு, மிகவும் சோர்வுடன் காணப்பட்ட சிறுமியை பார்த்த ஆசிரியர்கள் சிறுமியை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி கருவுற்று இருப்பதாகக் கூறி உள்ளார். குறிப்பாக, “சிறுமி ஒன்றரை மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும்” மருத்துவர்கள் கூறினார்கள். 

அத்துடன், 14 வயது சிறுமி கருவுற்ற விபரத்தை, மருத்துவமனை தரப்பிலும், பள்ளி சார்பில் அங்குள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அதிகாரிகள் முன் அந்த சிறுமி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தனக்கு நேர்ந்த பாலியல் அவலங்கள் குறித்து, சிறுமி அவர்களிடம் கூறி கதறி அழுள்ளார். இதனைப் புகாராகப் பதிவு செய்துகொண்ட அதிகாரிகள் மற்றும் போலீசார், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அதேபோல், ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்குச் சிறுமி இரையாக்கப்பட்ட விபரங்களையும் சேகரித்து, அவர்களைக் கைது செய்யும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதில், அந்த பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேர் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள் 3 பேரும் தற்போது தலைமறைவாகி உள்ளதால், அவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, 14 வயது சிறுமி, பக்கத்து வீட்டில் வசித்து வந்த  வட மாநிலத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதே ஊரில் பலருக்கும் இரையாக்கப்பட்ட சம்பவம், கேரளாவில் கடும் அதிர்ச்சியும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.