யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் படத்தினை இயக்கி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான இயக்குனராக மாறியவர் பிரஷாந்த் நீல்.பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தின் மாஸ் காட்சிகள் பெரிதும் பாராட்டப்பட்டன.இந்த படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்த படத்தை அடுத்து பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் சலார் படத்தினை இயக்கி வந்தார் பிரஷாந்த் நீல்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது,கொரோனா காரணமாக படத்தின் ஷூட்டிங் போடப்பட்டுள்ளது.

இந்த படத்தினை தொடர்ந்து ஜூனியர் NTR ஹீரோவாக நடிக்கும் NTR 31 படத்தினை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.அடுத்தடுத்து மிகப்பெரிய மாஸ் ஹீரோக்களோடு பிரஷாந்த் பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இயக்குனர் பிரஷாந்த் நீலின் பிறந்தநாளை முன்னிட்டு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் நிறைந்த ஒரு வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.செம சர்ப்ரைஸாக வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.