ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தாராள பிரபு. இதில் தான்யா ஹோப் நாயகியாக நடித்திருந்தார். படத்தில் சின்ன கலைவானர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கி யிருந்தார். 

Dharala Prabhu Maatra Thendral Video Song

பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைத்தனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து அற்புதமான ஆல்பத்தை அளித்தனர். 

Dharala Prabhu Maatra Thendral Video Song Dharala Prabhu Maatra Thendral Video Song

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால், திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால் இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்திலிருந்து மாற்ற தென்றல் வீடியோ பாடல் வெளியானது. பரத் ஷங்கர் இசையமைத்த இந்த பாடலை பிரதீப் குமார் மற்றும் பரத் ஷங்கர் பாடியுள்ளனர். சுப்பு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.