டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப் தொடர் காட்மேன். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.இவர் இதற்குமுன் ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் என்ற படத்தை இயக்கினார். மேலும் தற்போது விஜய் ஆண்டனி வைத்து தமிழரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். 

Daniel Balaji Speaks About Godman Controversy

சமீபத்தில் இந்த வெப் சீரிஸின் டீஸர் வெளியானது. அதில் இடம் பெற்றுள்ள ஆபாச காட்சிகளும், வசனங்களும் சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சைகளை கிளம்பியது. இதனால் டீஸர் நீக்கப்பட்டது. இதனையடுத்து ஜீ5 தளம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Daniel Balaji Speaks About Godman Controversy

இந்நிலையில் கலாட்டா முகநூல் லைவ்வில் தோன்றிய நடிகர் டேனியல் பாலாஜி, வெப் சீரிஸ் குறித்தும் இதனால் எழுந்த சர்ச்சைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசியவர், அடையாளம் தெரியாத ஃபேக் அக்கௌன்ட்டுகளில் இருந்து மிரட்டல் வருகிறது, அவர்கள் எல்லாம் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று கூறலாம். அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது. இது போல் பேசுபவர்களை எப்படி வளர்த்தாங்கனு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.