கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் பிரித்விராஜ். அதன் பின் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், அபியும் நானும், ராவணன் போன்ற படங்களில் நடித்து அவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மலையாளத்தில் முன்னணி ஸ்டாராக இருக்கும் பிரித்விராஜ் மோகன்லால் நடிப்பில் லூசிஃபர் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியானது. 

Prithviraj Shares His Corona Test Report

ஆடு ஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜார்டன் சென்றவர், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக, படக்குழுவுடன் அங்கேயே சிக்கி கொண்டார். சுமார் 70 நாட்களுக்கு மேலாக ஜார்டனில் இருந்த பிரித்விராஜ், படக்குழுவினருடன் சமீபத்தில் வீடு திரும்பினார். வெளிநாட்டில் இருந்து வந்ததன் காரணமாக அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

Prithviraj Shares His Corona Test Report

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா டெஸ்ட் ரிப்போர்ட்டை பகிர்ந்துள்ளார். அதில், தானாக முன்வந்து கொரோனா வைரஸ் டெஸ்ட் செய்து கொண்டேன். ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்தது. இருப்பினும் தொடர்ந்து தனிமையில் இருந்து வருகிறேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவு செய்துள்ளார்.