கடந்த 2005-ம் ஆண்டு வெளியான அன்பே ஆருயிரே திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா சோப்ரா. அதைத்தொடர்ந்து லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ரசிகர்களால் நிலா என அன்போடு அழைக்கப்பட்டார். கடைசியாக கில்லாடி எனும் படத்தில் நடித்திருந்தார். கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்கள் உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல், சமையல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் சோஷியல் மீடியாவில் ரசிகர்களோடு உரையாடி வருகின்றனர். 

Meera Chopra Receives Rape Threats On Twitter

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் மீரா, அப்போது தெலுங்கில் ஜூனியர் NTR விட மகேஷ் பாபு மிகவும் பிடிக்கும் என்று அவர் கருத்து தெரிவித்ததால், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் தவறான பதிவுகள் செய்ய துவங்கினர். அதில் பாலியல் மிரட்டல்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக நடிகை மீரா சோப்ரா கூறியுள்ளார்.

Meera Chopra Receives Rape Threats On Twitter

இதுகுறித்து ஜூனியர் என்டிஆரை டேக் செய்து கருத்து தெரிவித்த மீரா சோப்ரா, உங்களை விட மகேஷ்பாபு பிடிக்கும் என்று கூறியதற்காக இப்படி எல்லாம் நான் அழைக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. உங்களது ரசிகர்களால் எனது பெற்றோருக்கு இப்படிப்பட்ட வாழ்த்துகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற ரசிகர்களை பெற்றிருப்பது வெற்றி என்று நினைக்கிறீர்களா? எனது இந்த பதிவிற்கு பதில் சொல்வீர்கள் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ரசிகர்களின் மோசமான பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து அதை ஹைதராபாத் போலீஸ்க்கு டேக் செய்து நடவடிக்கைக்காக காத்திருக்கிறார் மீரா சோப்ரா.