துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தவர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக நரகாசூரன் திரைப்படம் உருவானது. சில காரணங்களால் இப்படம் ரிலீஸாகாமல் இருந்தது. இயக்கம் தவிர்த்து கண்ணாடி எனும் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அருண் விஜய் மற்றும் பிரசன்னா வைத்து மாஃபியா எனும் படத்தை இயக்கினார். 

Director Karthick Naren About Fake Casting Call

கார்த்திக் நரேன் தற்போது தனுஷ் வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். D43 என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு GV பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் ஷரஃபு மற்றும் சுஹாஸ் திரைக்கதை எழுதுகின்றனர்.

Director Karthick Naren About Fake Casting Call

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என் படத்தில் நடிக்கவைப்பதாக கூறி, ஒருவர் என் பெயரை தவறாக பயன்படுத்தி பொய் தகவலை பரப்பி பணம் கேட்டு வருகிறார். 9777017348 இந்த வாட்ஸப் நம்பரில் இந்த மாதிரி தகவல் வந்தால் தயவு செய்து அவற்றை பிளாக் செய்து விடுங்கள். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் நரகத்தில் எரிக்கப்படுவார்கள் என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.