பிக் பாஸ் 4ல் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா ஆகிய 4 பேர் தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் அதிக அளவு பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில் எலிமினேஷன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. இந்த வாரம் மொத்தம் 7 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள். ஆரி, பாலா, சோம் சேகர், ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி, சம்யுக்தா மற்றும் நிஷா என ஏழு பேர் இருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் கமல் இருவரை காப்பாற்றிவிட்டார்.

ஆரி மற்றும் பாலாஜி இருவரும் நாமினேஷனில் இருந்து தப்பியுள்ளனர். இதுவரை தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் நடைபெறாத ஒன்று போட்டியாளர்கள் வெளியில் தங்க வைக்கப்படுவது. அதை சந்தித்த அனுபவங்கள் பற்றி கமல் கேட்டார். அதற்கு அனைவரும் தாங்கள் முழுவதும் மூடப்பட்ட கார் மூலமாக சென்றதாகவும், போன், கடிகாரம் என எதுவும் இல்லாத இடத்தில் தான் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் சென்னையில் வெள்ளம் வந்ததா என போட்டியாளர்கள் கேட்க, 2015 அளவுக்கு சேதம் இல்லை என்ற ஒரு பதிலை மட்டும் கமல் கொடுத்தார். அர்ச்சனா கேங் மற்றும் பாலாஜி கேங் என இரண்டு தரப்பும் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டு இருந்தனர். பாலாஜி தனக்கு கேங் இல்லை என தெரிவித்தார். தனது பிரச்சனைகள் மற்றும் முடிவுகள் மற்றவர்களுக்கு influence ஆக கூடாது என்பதை தான் பார்த்துக்கொள்வதாக தெரிவித்தார் பாலா.

இரு தரப்புக்கும் இடையே இருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் இது குழு விளையாட்டு அல்ல என்பதை கமல் மீண்டும் அட்வைசாக செய்தார். கடந்த வாரம் முழுவதும் சம்யுக்தா பேசிய பல விஷயங்கள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவரை டம்மி மம்மி என்று கூட கிண்டல் செய்து வந்தனர். மேலும் வளர்ப்பு வளர்ப்பு என அடிக்கடி பேசும் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தார்கள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டின் 56-ம் நாளில் எவிக்ஷன் பட்டியலுடன் கமல் ஹாசன் வந்தார். அப்போது தெரியும் என்னனு... இதுக்கு மேல பில்ட்டப் எல்லாம் வேண்டாம் என்று கூறினார். சம்யுக்தா கை உயர்த்துவதை பார்த்தால், இந்த வார எவிக்ஷன் அவர் தானா என்ற குழப்பத்தில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.