தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது..இதனை தொடர்ந்து இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.

Charmme Kaur on Vijay Devarakonda Fighter Script Change Rumours

இந்த படத்தினை பூரி ஜெகன்நாத்,சார்மீ,கரண் ஜோகர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அனன்யா பாண்டே,ரம்யா கிருஷ்ணன்,ரோனித் ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு ஃபைட்டர் என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Charmme Kaur on Vijay Devarakonda Fighter Script Change Rumours

கொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங் செய்யமுடியாததால் இந்த படத்தின் கதையில் மாற்றம் செய்துள்ளனர் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.இது குறித்து ரசிகர் ஒருவர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மியிடம் ட்விட்டரில் கேள்வியெழுப்பினார்.இதற்கு பதிலளித்த சார்மி இந்த படத்தின் கதை ஒரு பிளாக்பஸ்டர் கதை அதை மாற்றும் எண்ணம் இல்லை மாற்றவும் மாட்டோம் ,இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்று விளக்கமளித்தார்.கொரோனா பாதிப்பு குறைந்த பின் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிவித்த அவர் விரைவில் டைட்டிலை அறிவிப்போம் என்று தெரிவித்தார்.