ஓடும் பேருந்தில் குழந்தையுடன் இருந்த பெண்ணை நடத்துநரும் - ஓட்டுநரும் மாறி மாறி பாலியல் பாலத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவிலிருந்து மதுரா நோக்கிச் சென்ற படுக்கை வசதிகள் கொண்ட தனியார் பேருந்தில், இளம் பெண் ஒருவர் தன் குழந்தையுடன் பயணம் செய்துள்ளார்.

Young mother sexually assaulted by bus driver and conductor

அந்த பெண் மிகவும் அழகாக இருந்த நிலையில், வேறு துணையின்றி தனியாக வந்ததால், காமவசப்பட்ட நடத்துநரும் - ஓட்டுநரும் முதலில் பாலியல் ரீதியாக சீண்டி உள்ளனர். 

அப்போது பேருந்தில் சக பயணிகள் இதனைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்துள்ளனர். இதனை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட நடத்துநரும் - ஓட்டுநரும் நள்ளிரவு நேரத்தில் பேருந்து லக்னோ சாலையில் சென்றுக்காண்டிருந்தபோது, பயணிகள் அனைவரும் நன்றாகத் தூங்கி உள்ளனர். 

அந்த நேரம் பார்த்து, நடத்துநரும் - ஓட்டுநரும் அந்த இளம் பெண்ணை மாறி மாறி வெறித் தீர பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், செய்வது அறியாது தவித்த அந்த பெண், பேருந்தை விட்டு இறங்கி, அங்குள்ள கவுத்தம புத்தா நகர் காவல் நிலைய்தில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரில் ஒருவரைக் கைது செய்தனர். அதற்குள் மற்றொருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அத்துடன், அவர்கள் ஓட்டி வந்த பேருந்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Young mother sexually assaulted by bus driver and conductor

மேலும், அந்த பேருந்தில் பயணம் செய்த சக பயணிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெண் ஒருவர் 2 பேரால் பலாத்காரம் செய்யப்படுவதைத் தடுக்காமல் சுயநலமாக இருந்து வேடிக்கை பார்த்த சில பயணிகள் வெட்கி தலைகுனிந்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.