உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவருக்கு  பொம்மையோடு விநோதமான முறையில் நடந்த திருமணம் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 80 வயது மதிக்கத் தக்க ஷிவ் மோகன் என்பவருக்கு 9 மகன்கள் இருந்தனர். 

Man marries doll after eight brothers marry women

இவர்களில் 8 மகன்களுக்கு பெண் பார்த்து முறைப்படி ஷிவ் மோகன், திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த 8 பேரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஷிவ் மோகனுக்கு வயது அதிகம் ஆனதால், தனது கடைசி மகன் பற்றிய கவலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, “நான் உயிரோடு இருக்கும்போதே என் கடைசி மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்” என்று தனது விருப்பத்தைத் தனது மற்ற மகன்களிடமும், ஊர் பெரியவர்களிடம் ஷிவ் மோகன் கூறியுள்ளார். 

ஆனால், மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு தன்னிடம் எந்த வசதியும் இல்லாததாலும், மகன் அறிவாளி இல்லை என்பதால், வித்தியாசமாக யோசித்த ஷிவ் மோகன், ஒரு பொம்மையை மணமகள் போல் மிக அழகாக அலங்கரித்து, அழைத்து வந்தனர்.

அப்போது, மணமகள் போல் அலங்கரிக்கப்பட்ட பொம்மைக்கு ஷிவ் மோகனின் கடைசி மகன் தாலி கட்டினார். 

Man marries doll after eight brothers marry women

இந்த திருமணத்தில் ஷிவ் மோகனின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், விநோதமான முறையில் பொம்மைக்குத் தாலி கட்டிய புகைப்படங்கள், தற்போது வைரலாகி வருகிறது.