10 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து கடந்த 2 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை, நெஞ்சைப் பதற வைத்துள்ளது. 

தாய்லாந்து நாட்டில் தான் இப்படியொரு கொடுமையான சம்பவம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியடை செய்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் சுபான் பூரி என்னும் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 5 ஆண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவான 2 சிறுவர்கள் என மொத்தம் 7 பேர் சேர்ந்த கடந்த 2 ஆண்டுகளாக மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

 Thailand 10 yo girl sexually assaulted by seven men

பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் ஒருவருக்கு 51 வயது என்றும், மற்றவர்களுக்கு 34, 32, 21, 32 வயது என்றும் தெரியவந்துள்ளது. மற்ற 2 சிறுவர்களும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதில், 51 வயதான முதியவர் தான் அந்த சிறுமியை மாறி மாறி பலதுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இருவரும், சில முறை மட்டுமே அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அந்த 7 பேரும் தங்களது குற்றத்தை இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சிறுமியின் வீட்டில் உள்ளவர்கள், “தங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது” என்று கருத்து கூறியுள்ள நிலையில், சிறுமியின் சகோதரி ஒருவருக்கு மட்டுமே எல்லா விசயமும் தெரிந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Thailand 10 yo girl sexually assaulted by seven men

அத்துடன், “இந்த சிறுமி எப்படி, இந்த கும்பலிடம் சிக்கினார்?, எப்படி 2 வருடங்கள் இந்த சிறுமியை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்?, அது எப்படி சாத்தியம்? அதுவரை சிறுமியின் வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படித் தெரியாமல் போனது?” போன்ற கேள்விகள்; போலீசாருக்கு மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவேளை இந்த வழக்கில் 7 பேர் மீதான குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு அதிக பட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 10 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து கடந்த 2 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை, அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.