விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர் கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அமித் இதனை தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் அமித் ஹீரோவாக நடித்திருந்தார்.இதனை தவிர விஜய் டிவியின் மாப்பிள்ளை,சன் டிவியின் கண்மணி உள்ளிட்ட தொடர்களில் சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளார் அமித்.

தமிழ்,கன்னடம்,ஹிந்தி என்று பல மொழியின் முக்கிய படங்களான என்னை அறிந்தால்,2 ஸ்டேட்ஸ்,குற்றம் 23,மிருதன் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் அமித்.மேலும் டப்பிங் கலைஞராகவும் சில படங்களிலும்,நிகழ்ச்சிகளும் இருந்துள்ளார்.மேலும் சில தொடர்களை தொகுத்து வழங்கியும் அசத்தியுள்ளார் அமித்.

தற்போது ஜீ தமிழில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் திருமதி ஹிட்லர்.ஹிந்தியில் செம ஹிட் அடித்த Guddan Tumse NaHo Payega என்ற சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த தொடர்.அமித் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்க கீர்த்தனா இந்த தொடரின் நாயகியாக நடிக்கிறார்.அம்பிகா இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடரில் தற்போது சிறப்பு தோற்றத்தில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி புகழ் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார்.இதுகுறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்