தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பரத் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில், அடுத்ததாக வெயில் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் பரத் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

முன்னதாக இயக்குனர் N.விஜயராஜ் இயக்கத்தில் முன்னறிவான் படத்தில் நடித்து வரும் நடிகர் பரத் நடிப்பில் தொடர்ந்து யாக்கை திரி மற்றும் 8 ஆகிய திரைப்படங்களும் தயாராகி வருகின்றன. மேலும் தனது திரைப்பயணத்தில் 50வது திரைப்படமாக இயக்குனர் RP.பாலா இயக்கத்தில் லவ் திரைப்படத்தில் பரத் நடித்து வருகிறார். பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் த்ரில்லர் திரைப்படமாக லவ் திரைப்படம் தயாராகி வருகிறது.

இதனிடையே மீண்டும் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மிரள். இயக்குனர் M.சக்திவேல் இயக்கத்தில் மிரட்டலான த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் மிரள் படத்தை மரகதநாணயம் & ராட்சசன் உள்ளிட்ட குறிப்பிடப்படும் படங்களை தயாரித்த AXESS FILM FACTORY நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு அவர்கள் தயாரித்துள்ளார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படத்திற்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவில், கலைவாணன்.R படத்தொகுப்பு செய்ய, பிரசாத்.SN இசையமைத்துள்ளார். சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிடும் மிரள் திரைப்படம் வருகிற நவம்பர் 11ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் மிரள் படத்திற்கு சென்சாரில் எந்த CUT-ம் இல்லாமல் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

The most awaited slasher thriller of the year #Miral is certified UA without any cuts!!

Get ready to watch #Miral in theatres on November 11th!@AxessFilm @Dili_AFF @SakthiFilmFctry @sakthivelan_b @bharathhere @vanibhojanoffl @ksravikumardir @nameissakthi pic.twitter.com/BN1odTSYXM

— Sakthi Film Factory (@SakthiFilmFctry) November 2, 2022