தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவர் நடித்த நானே வருவேன் திரைப்படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து வாத்தி,வெற்றிமாறனுடன் ஒரு படம்,,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம்,,கேப்டன் மில்லர்,தி கிரே மேன் 2 என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருந்தனர்.இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இந்த படத்தினை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.நித்யா மேனன்,ராஷி கண்ணா,ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான தாய் கிழவி பாடல் வீடியோ ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த பாடல் வீடியோ தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.