தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகராக வலம் வரும் நடிகர் கதிர் மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் மிக சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். மேலும் பிகில் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த கதிர் நடிப்பில் கடைசியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசான சூழல் வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதேபோல் முன்னணி ஒளிப்பதிவாளராக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களில் பணியாற்றிய நட்டி என்கிற நடராஜன் தொடர்ந்து தமிழ் திரையுலகில் நடிகராகவும் மிளகா, சதுரங்க வேட்டை, கதம் கதம், வால்டர், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நட்டி கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்திலும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

இந்த நிலையில் கதிர் மற்றும் நட்டி இணைந்து நடிக்க தயாராகியுள்ள திரைப்படம் யூகி. இயக்குனர் ஸாக் ஹாரீஸ் இயக்கத்தில் கதிர், நட்டி, நரேன், கயல் ஆனந்தி, பவித்ர லக்ஷ்மி, ஆத்மீயா ராஜன், பிரதாப் போத்தன், நமோ நாராயன், முனீஸ்காந்த், வினோதினி, பிரான்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் இணைந்து நடித்துள்ள யூகி படத்திற்கு பாக்கியராஜ் கதையில், ஸாக் ஹாரிஸ் திரைக்கதை அமைக்க, புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவில் ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் ராஜதாஸ் குரியாஸ், சிஜூ மேத்யூ, நாவிஸ் சேவியர், லவன்,குஷன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள யூகி திரைப்படம் 11:11 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட வருகிற நவம்பர் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யூகி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள அந்த டீசர் இதோ…