தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருந்த மாஃபியா படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,பார்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.பார்டர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து ஹரி இயக்கத்தில் தயாராகி வரும் AV 33 படத்தில் நடித்து வந்தார்.Drumsticks Productions இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளார்.யோகி பாபு,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்போது இவர் கடாமீசையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இது ஹரி படத்திற்கான கெட்டப்பா என்று இன்னும் உறுதியாகவில்லை இருந்தாலும் செம மாஸாக இருக்கும் அருண் விஜயின் இந்த புகைபடங்கள் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arun Vijay (@arunvijayno1)