மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த M.குமரன் S/O மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை அசின். தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த அசின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த கஜினி திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். 

தொடர்ந்து தளபதி விஜய்யுடன் சிவகாசி,போக்கிரி,காவலன், அஜித்குமார் உடன் ஆள்வார், வரலாறு சீயான் விக்ரம் உடன் மஜா உலகநாயகன் கமலஹாசன் உடன் தசாவதாரம் என அனைத்து முன்னணி உச்ச நட்சத்திர நடிகர்களோடு இணைந்து நடித்தார்.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர்கானுடன் இணைந்த அசின் தமிழில் சூப்பர் ஹிட்டான கஜினி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் கஜினி திரைப்படம் மெகா ஹிட் ஆனது. 

இதையடுத்து இந்திய அளவில் முன்னணி நட்சத்தர நடிகையான நடிகை அசின் தொடர்ந்து அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த ஹவுஸ்ஃபுல் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த ரெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்ட நடிகை அசின்  தற்போது திரைத்துறையில் இருந்து விலகி அழகான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு அசின் ராகுல் சர்மா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது மூன்று வயதாகும் செல்ல மகள் அரின்-ன் அழகிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கதக் நடன பயிற்ச்சியில் ஈடுபடும் செல்ல மகள் அரின்-ன் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்-ல் நடிகை அசின் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

popular indian actress asin daughter photo goes viral