இந்த மோசமான பேரிடர் கால கட்டத்தில் நமக்கு நெருக்கமான பலரும் உயிரிழப்புகளும் அவதிப்பட உதயம் நாம் பார்த்து வருகிறோம் தமிழ் சினிமாவிலும் பல  பிரபலங்கள் உயிரிழந்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறதுஇந்த நிலையில் மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி எழுத்தாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நடிகர் தயாரிப்பாளர்  R.K.சுரேஷ்  நடித்து வெளிவந்த பில்லா பாண்டி திரைப்படத்தின் திரைக்கதை  ஆசிரியரான M.M.S.மூர்த்தி அவர்கள் நேற்று உயிரிழந்தார். R.K.சுரேஷ் கதாநாயகனாக நடித்த பில்லா பாண்டி திரைப்படத்தில் நடிகை இந்துஜா மற்றும் நடிகை சாந்தினி இருவரும்  கதாநாயகிகளாக நடித்துள்ளனர் இசையமைப்பாளர் இளையவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் KC.பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

M.M.S.மூர்த்தி தமிழ் சினிமாவில் பல முன்னணி திரைப்படங்களுக்கு புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். குறிப்பாக மருது சலீம் போன்ற திரைப்படங்களுக்கு புரோடக்சன் மேனேஜர் பணியாற்றியுள்ளார். பிறகு பில்லாபாண்டி திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்ட M.M.S.மூர்த்தி  நேற்று திடீரென உயிரிழந்துள்ளார். 

M.M.S.மூர்த்தியின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. M.M.S.மூர்த்தியின் மறைவுக்கு பல திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். M.M.S.மூர்த்திக்கு மிகவும் நெருக்கமான நடிகர் R.K. சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் எம்எம்எஸ் மூர்த்தியை பிரிந்து வாடுவதாக இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.