ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றிப் பெற்றுபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 36 வது லீக் ஆட்டத்தில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன் படி, டெல்லி அணி சார்பில் ப்ரித்வி ஷா - ஷிகர் தவான் ஆகியோர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

இவர்கள் இருவரம் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் 8 மற்றும் 10 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதனால், 21 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த நிலையில் டெல்லியை ஸ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பன்ட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து சற்று மீட்க பேராடினார்.

இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அணியின் ஸ்கோர் 83 ஆக இருந்தபோது, டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் 24 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். 

மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர், 42 ரன்கள் எடுத்திருந்தபோது, ராகுல் டெவாட்டியா பந்துவீச்சில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த ஹெட்மெயர் அதிரடியாக விளையாடி 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

இதனால், 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது. இதனால், ராஜஸ்தான் வெற்றிப் பெற 155 ரன்களை நிர்ணயித்தது டெல்லி அணி.

ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் முஸ்தபிஸூர் ரஹ்மான், சேட்டன் சக்காரியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் டெவாட்டியா, ஷம்சி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், தொடக்கம் சரியாக அமையாமல் டெல்லி அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தன. வந்த அனைவரும், 1, 5, 7 என்ற எண்ணிக்கையிலேயே வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

பின்னர் வந்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பேர் என்று அதிகபட்சமாக 70 ரன்கள் குவித்தார். ஆனால், அவருக்கு யாரும் சரியாக பாட்னர்ஷிப் அமையாத காரணத்தால், Mahipal Lomror மட்டும் இரட்டை இலக்கில் 19 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக, 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி மிக எளிதாக வெற்றி பெற்றது.

இதனிடையே, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளதால், பஞ்சாப் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.