தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அனைத்து வயதினரையும் கவரும் சிறந்த என்டர்ட்டனிங் திரைப்படங்களை கொடுப்பது சிவகார்த்திகேயனின் வழக்கம். அந்த வகையில் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயார் நிலையில் உள்ளன.

முன்னதாக முதல்முறை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஏலியன்-சயின்ஸ் பிக்சன் திரைப்படமான அயலான் திரைப்படத்தை இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள டான் படத்தின் டப்பிங் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வருகிற அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது டாக்டர். சிவகார்த்திகேயனின் திரைப்படம் டாக்டர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் மற்றும் K.J.R.ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள டாக்டர் திரைப்படத்தில் வில்லனாக நடிகர் வினய் நடித்துள்ளார்.

நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, விஜய் டிவி புகழ், அர்ச்சனா, தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பரபரப்பான டாக்டர் டிரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.