மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பிரித்திவிராஜ் மலையாள மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி  என இந்தியாவின் பல மொழி ரசிகர்களுக்கும் அபிமான நடிகராகத் திகழ்கிறார். குறிப்பாக கடைசியாக வெளிவந்த பிரிதிவிராஜின் ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் இந்தியா முழுக்க பல சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

தொடந்து தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி நடிக்க ஐயப்பனும் கோஷியும் திரைப்படம், பீம்லா நாயக் என ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. மேலும் கோல்டு கேஸ் & குருதி என அடுத்தடுத்து திரில்லர் திரைப்படங்களை கொடுத்து வரும் பிருத்விராஜின் அடுத்த த்ரில்லர் திரைப்படமாக வெளிவருகிறது பிரம்மம். 

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் திரைப்படத்தின் மலையாள ரீமேக்காக தயாராகியிருக்கும் பிரம்மம் திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். பிருத்விராஜ் உடன் இணைந்து நடிகைகள் மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா மற்றும்  நடிகர் உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏபி இன்டர்நேஷனல் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள பிரம்மம் திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்க ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். வருகிற அக்டோபர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் பிரம்மம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இன்று பிரம்மம் திரைப்படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.