தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தனக்கே உரித்தான பாணியில்  கிளாஸ்ஸான திரைப்படங்களை வழங்கிவரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். கடைசியாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியானது. 

தொடர்ந்து நெட்ஃபிக்ஸில் வெளியான பாவக் கதைகள் மற்றும் நவரசா ஆன்தாலஜி வெப்சீரிஸ்களில் வான் மகள் மற்றும் கிட்டார் கம்பி மேலே நின்று ஆகிய எபிசோடுகளை இயக்கினார். அடுத்தடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில் ஜோஷ்வா இமைபோல் காக்க மற்றும் சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கும் நிலையில் அடுத்த படத்தை தொடங்கினார் கௌதம் வாசுதேவ் மேனன்.

மூன்றாவது முறையாக நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகிறது வெந்து தணிந்தது காடு. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய பாடல் ஒன்று வெளியானது.

டார்லிங் எனும் புதிய பாடல் வீடியோ ஒன்றை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த பாடலில் நடிகைகள் ரேவதி மற்றும் பிரயாகா மார்டின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்-ன் அழகான ஒளிப்பதிவில் பாடகர் கார்த்திக் இசை அமைத்திருக்கும் டார்லிங் பாடலை கவிஞர் கார்க்கி எழுத பாடகர் கிருஷ்ணா பாடியுள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் இந்த டார்லிங் பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.