இந்திய திரையுலகின் முனன்ணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை தமன்னா அடுத்ததாக பப்ளி பவுன்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் பல தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்கார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஹிந்தி ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்கிளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

முன்னதாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்திலும் கதாநாயகியாக நடித்து வரும் தமன்னா தெலுங்கில் விரைவில் வெளிவரவுள்ள குருதுண்டா சீதாக்களம் மற்றும் F3 ஆகிய படங்களிலும் நடிகை நடித்துள்ளார். மேலும் தமன்னா நடிப்பில் பாலிவுட்டில் போலே சுடியான் மற்றும் பிளான் ஏ பிளான் பி ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட முன்னணி மொழி திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்தும், டான்ஸராக சில படங்களின் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் தமன்னா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.  அந்தவகையில் தெலுங்கில் சமீபத்தில் வெளிவந்த கணி படத்தில் கோட்தே எனும் ஒரு பாடலுக்கு மட்டும் தமன்னா நடனமாடியுள்ளார்.

இயக்குனர் கிரண் கோரபடி இயக்கத்தில் நடிகர் வருண் தேஜ் கதாநாயகனாக நடித்து அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற கணி படத்தில் இசையமைப்பாளர் தமன்.S இசையில் தமன்னா நடனமாடிய கோட்தே பாடலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் கோட்தே பாடல் வீடியோ தற்போது வெளியானது. தமன்னாவின் துள்ளலான கோட்தே பாடல் வீடியோ இதோ…