இந்து அமைப்புகளை சாடுவதை போல் இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் தவறுகளையும் திருமாவளவன் தட்டிக்கேட்க வேண்டும் என்று ஏகத்துவ ஜமாத்தின் தலைவர் வேலூர் இப்ராகிம் பேசியிருக்கிறார். 

”தமிழ்நாட்டில் மத நல்லிணக்கம் நீடித்து வருகிறது. ஆனால் 20 ஆண்டுகளாக இந்துக்கள், இஸ்லாமியர்கள் நல்லிணக்கத்திற்கு சில இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களும் திராவிட அரசியலும் சிதைக்கும் வகையில் ஏற்படுத்துகிறது. மத நல்லிணக்கத்தை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம், ஆனால் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறது. 

இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ மத வெறித்தனத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுபோன்ற அமைப்புகளோடு தான் திருமாவளவன் கொஞ்சுகிறார். பெரியார் செய்த காரியத்தைத்தான் திருமாவளவனும் செய்து வருகிறார். திருமாவளவன் இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் தவறுகளையும் தட்டிக் கேட்க வேண்டும். இனியும் இந்து மதத்தை தொடர்ந்து  தாக்கி பேசி வந்தால், திருமாவளவனுக்குச் சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும்” என்று இப்ராகிம் பேசியிருக்கிறார்.